இன்று முதல் 28 ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இன்று (18-08-2026) முதல் கண்டி எசல பெரஹேராவின் முதல் கும்பல் பெரஹேரா வீதிகளில் வலம் வரவுள்ளது.
இந்த நிலையில் பெரஹேரா முடியும் நாள் (28-08-2026) வரை மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதான சாலை
எனவே, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் கோட்டத்தில், பிரதான சாலையை ஒட்டியுள்ள எரிபொருள் நிலையம் வரையிலான அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

