வெள்ளைக் கொடி ஏந்தி ஈரான் சரண் அடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
ஈரான் சரணடைவதற்கு காலக்கெடு ஏதும் இல்லை. நான் அவசரப்படவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத்தடை ஈரான் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
ஓமான் – ஈரான் இடையே ஒப்பந்தம்
இதேவேளை ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக ஓமான் – ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஈரான் ஒட்டிய கடல் பரப்பு வழியாக கப்பல்கள் உள்ளே நுழையவும், ஓமான் அருகிகேயுள்ள கடல் பரப்பு வழியாக வெளியேறவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்த நிலையில் தங்கள் தரப்பின் பங்களிப்பு இல்லாமல், ஈரான் – ஓமான் ஒப்பந்தம் செய்தது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமான் மீது தாக்குதல் நடத்துவோம்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தலையிட்டால் ஓமான் மீது தாக்குதல் நடத்துவோம் என அவர் எச்சரித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

