Last Updated:
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் வருமான வரம்பைப் பொருட்படுத்தாமல் இத்திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரையிலான கூடுதலான காப்பீட்டுப் பலனைப் பெறலாம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் வரை ரொக்கமில்லா (Cashless) மற்றும் காகிதமில்லா (Paperless) மருத்துவச் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.


