பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், கோவைக்காய், அவரை, பீன்ஸ் உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்வதற்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது. நிரந்தர பந்தல் அமைப்பதன் மூலம் தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்ய முடிவதுடன், நோய் மற்றும் பூச்சித் தாக்குதலையும் குறைக்க முடியும். மேலும், எளிதான அறுவடை மற்றும் அதிக மகசூலுக்கும் இது வழிவகுக்கும்.

