AI: 10 வருஷம் வெயிட் பண்ணுங்க.. அடுத்த புரட்சி! மொத்த மருத்துவ துறையும் தலைகீழாக மாறப்போகுது – Anthropic சிஇஓ
ஐடி சேவை, ஆட்டேமொபைல், கட்டுமானம் என பல துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஏஐ தற்போது அதிகளவில் மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட துவங்கியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரிட்டன் என பல நாடுகளில் ஏஐ தொழில்நுட்பத்தை மருத்துவ துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் பல மருத்துவமனைகள் நேரடியாக ஏஐ நிறுவனத்திடம் இணைந்து மருத்துவ பரிசோதனை தரவுகளை ஆய்வு செய்வது, நோய்களை ஆய்வுகள், புது விதமான மருந்துகளை கண்டுப்பிடிப்பது என பல பிரிவுகளில் ஏஐ பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவம், தொழில்நுட்பம் இணைந்த சிக்கிச்சை முறை எத்தகைய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் கிளாட், ஃபேபிள் ஏஐ மாடல்களை உருவாக்கிய அந்திரோபிக் நிறுவனத்தின் சிஇஓவான டாரியோ அமோட் கூறுகையில் அடுத்த 5-10 வருடத்தில் மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலான நோய்களுக்கான தீர்வுகளை ஏஐ மூலம் கண்டுப்பிடிக்க உதவும் என தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து எக்ஸ் தளத்தில் டாரியோ அமோட் செய்த பதிவுக்கு பலர் ஏஐ மருத்துவ துறையில் ஈடுப்படுத்தக்கூடாது என கூறி, அவரின் கருத்துக்கு எதிராக பதவி செய்தனர். இந்த எதிர்மறையாக கருத்துகளுக்கு ஏஐ மூலம் மருத்துவ சேவை துறையில் 50 – 100 வருட வளர்ச்சியை வெறும் 10 வருடத்தில் அடைய முடியும், இதேபோல் மருத்துவ துறையில் புதிய கண்டுப்பிடிப்புகளை குறைந்தது 10 மடங்கு அதிகரிக்க முடியும் என தெரிவித்தார் டாரியோ அமோட்.
இதன் மூலம் புதிய மேம்பட்ட மருந்துகள் கிடைக்கலாம், புதுவிதமான சிக்கிச்சை முறை உருவாகலாம், தீர்க்க முடியாத நோய்க்கு தீர்வு கானவும் முடியும் என தெரிவித்தார். அதேபோல் ஏஐ கேன்சருக்கான மருந்தை கண்டுப்பிடிக்கும் என விளம்பரம் செய்தால் மட்டும் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது.
மக்களுக்கு இன்னுமும் ஏஐ மீது நம்பிக்கை வரவில்லை. சமீபத்தில் என்னுடைய சந்தை Hepatitis C மூலம் உயிரிழந்தார், ஆனால் அவருடைய மரணத்திற்கு பின்பு சில வெளியான sofosbuvir என்ற மருந்து 95 சதவீதம் பேரை காப்பாற்றி வருகிறது. ஏஐ மூலம் இத்தகைய கால தாமதத்தை சரி செய்ய முடியும் என தனது சொந்த அனுபவத்தை வைத்தும் பேசியுள்ளார்.
மேலும் டாரியோ அமோட் கூறுகையில், அந்திரோபிக் தற்போது பயாலஜி மற்றும் மருத்துவ துறையில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் வேளையில், அடுத்த சில மாதங்களில் இத்துறையில் முக்கியமான முன்னேற்றத்தை அடைவோம் எனவும் தெரிவித்தார்.

