மாணவர்களின் கருத்துகள் சமூக ஊடகங்களில் அவர்களை அவமதிக்கும் வகையில் மேற்கோள் காட்டப்பட்டு பகிரப்படுவதை அமைச்சகம் அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களின் முறையான அனுமதியின்றி ஊடகங்களால் நேர்காணல் செய்யப்படுவதைத் தடுத்து, கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பரீட்சை முடிந்த பிறகு மாணவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு, அவர்கள் பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கருத்துகள் சமூக ஊடகங்களில் அவர்களை அவமதிக்கும் வகையில் மேற்கோள் காட்டப்பட்டு பகிரப்படுவதை அமைச்சகம் அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது ஆசிரியர்களின் முன் அனுமதியின்றி மாணவர்களின் கருத்துகளைப் பெறுவதற்கோ, பதிவு செய்வதற்கோ அல்லது அவற்றை ஒளிபரப்புவதற்கோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சிறுவர்கள் தொடர்பான இத்தகைய விதிகளை மீறி, மாணவர்களின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

