ஒமன் சொன்ன திட்டம்.. உடனே ஓகே சொன்ன ஈரான்.. ஹார்முஸ் நீரிணைக்கு விடிவுகாலம்!
அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்க மிக முக்கியமான காரணம் ஒமன் மற்றும் ஈரான் மத்தியில் நடக்கும் முக்கியமான பேச்சுவார்த்தை தான். போரை அமைதியாக முடிக்க கடந்த 5 மாதமாக பாகிஸ்தான், கத்தார் நாடுகள் வழியாக செய்யப்பட்டு வந்த பேச்சுவார்த்தை எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிய நிலையில், ஹார்முஸ்-ல் ஒமன் வழியாக அமெரிக்கா உருவாக்கிய வழித்தடம் வழியாக சென்ற கப்பல்கள் அடுத்தடுத்து தாக்குதலை எதிர்கொண்டது.
இதனால் இரு நாடுகளும் ஹார்முஸ் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்தை சீர்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்கா – ஈரான் மத்தியில் போர் தாக்குதல் இல்லாமல் இருக்கிறது, ஆனால் இதே வேளையில் ஈரான் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு அதிகமாக நடந்து வரும் பேச்சுவார்த்தை மூலம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் எந்த வழியில் செல்ல வேண்டும், எந்த வழியில் வெளியேற வேண்டும் என்பதற்காக முடிவுகள் இரு நாடுகள் மத்தியில் எட்டப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதை அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதுக்குறித்து ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளரான இஸ்மாயில் பாகாயி ஈரான் அரசு பத்திரிக்கையான டெஃபா-வுக்கு அளித்த பேட்டியில் அமெகிக்க முற்றுகை குறித்து பேச்சுவார்த்தை நடைப்பெற்றும் இதில் இருதரப்பும் முன்னேற்றம் கண்டு உள்ளோம்.
அமெரிக்காவின் முற்றுகைய ஹார்முஸ் நீரிணையில் இருக்கும் வேளையிலும், இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கப்பல் வழித்தடம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என இஸ்மாயில் பாகாயி தெரிவித்தார். ஈரான் போர் தொடர்பாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்தும் இந்த பேச்சுவாத்தையில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த பேச்சுவார்த்தை போர் முழுமையாக முடியும் வரையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார் இஸ்மாயில். ஆனால் ஈரான் தரப்பில் அமெரிக்கா – ஈரான் மத்தியில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த அமைதி ஒப்பந்த விதிமுறைகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை முக்கிய கண்டிஷனாக வைத்துள்ளது. இதை நிறைவேற்றினால் மட்டுமே ஹார்முஸ் திறக்கப்படும்.
இந்த 2-3 வார பேச்சுவார்த்தை மூலம் ஒமன் – ஈரான் மத்தியில் கப்பல் போக்குவரத்துக்கான வழித்தடம் உறுதி செய்யப்பட்டாலும் ஹார்முஸ் முழுமையாக திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் முழுமையாக உருவாகவில்லை.

