தங்கம் விலை: சுதந்திர தின நாளில் பழைய விலைக்கே திரும்பிய தங்கம்.. இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?
தொடர்ச்சியாக 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று விலை கூடி பழைய விலைக்கே திரும்பிவிட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது.இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை திங்கள் அன்று விலை குறைந்தது, செவ்வாய் , புதன், வியாழன் என தொடர்ந்து 3 நாட்களில் ஒரு கிராம் 270 ரூபாயும் ஒரு சவரன் 2,000 ரூபாய்க்கு மேலும் விலை அதிகரித்தது. இனி தங்கம் விலை ஏறுமுகம் தான் என மக்கள் நினைத்த நிலையில் நேற்று காலை தடாலடியாக விலை குறைந்தது. ஆனால் மீண்டும் நேற்று மாலையே விலை உயர்ந்தது. சுதந்திர தினமான இன்றும் தங்கம் லேசாக உயர்ந்து வியாழக்கிழமை விலைக்கே வந்துவிட்டது.
மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,220 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,760 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 22 ரூபாய் விலை உயர்ந்து 15,513 ரூபாய்க்கும் 10 கிராம் 1,55,130 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 20 ரூபாய் விலை குறைந்து, 12,000 ரூபாய்க்கும் ஒரு சவரன் 160 ரூபாய் கூடி 96,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.55 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 255 ரூபாயாக வந்து நிற்கிறது.
தங்கம் , வெள்ளி விலைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சரிந்தன. ஆனால் ஆகஸ்ட் மாதம் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த மாதத்தில் முதல் 15 நாட்களிலேயே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இனி வரும் நாட்கள் உலக கச்சா எண்ணெய் விலை, ஈரான் போரின் போக்கு ஆகியவற்றை பொறுத்து விலை மாறும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

