Last Updated:
எல்லாவற்றையும் விட, தமிழக அரசியலின் அடுத்தக்கட்ட பாதையைத் தீர்மானித்த ஒரு பெரும் பிளவு, இதே ஆகஸ்ட் 15 அன்றுதான் வெடித்தது
1947 ஆகஸ்ட் 15. ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டமும் சுதந்திரக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த வரலாற்றுத் தருணம் அது. ஆனால், தேசத்தந்தை மகாத்மா காந்தியோ டெல்லி கொண்டாட்டங்களின் பக்கமே போகவில்லை. கல்கத்தாவின் பெலியாகட்டாவில் ஒரு பழுதடைந்த வீட்டில் உண்ணாநோன்பிலும் பிரார்த்தனையிலும் ஆழ்ந்திருந்தார். அவரின் இந்த மௌனம் பிரிவினைத் துயரத்தை உணர்த்தியது.


