70,000 இற்கும் மேற்பட்ட கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் நிர்வாகம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைப்பது குறித்துப் பேசிய கருத்துகளைத் தூதுவர் ஹோக்ஸ்ட்ரா நியாயப்படுத்திப் பேசியதே இந்த எதிர்ப்பிற்குக் முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 வீதம் கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த மனு விரைவில் கனடா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

