Last Updated:
பண்ணையில் தயாரிக்கப்படும் பொருட்களில் விபூதி கிலோ ரூ.300-க்கும், இயற்கை உரம் கிலோ ரூ.10-க்கும், மூலிகை சாம்பிராணி கப் ஒன்று ரூ.8-க்கும், கோமியம் லிட்டர் ரூ.7-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைக்குச் செல்லாமல், நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் மாட்டுப் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு, அதன் மூலம் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து வருமானம் ஈட்டி வருகின்றனர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள்.

