Gold Rate: அதிர்ச்சி தரும் ஆகஸ்ட்..!! 12 நாட்களில் 7 நாட்கள் தங்கம் விலை ஏறுமுகம்..!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 12 நாட்களில் 7 நாட்கள் தங்கம் விலை ஏறுமுகமாக தான் இருக்கிறது.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 400 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு 2,400 ரூபாயும் கிராமுக்கு 300 ரூபாயும் விலை உயர்ந்தது. மாலையில் விலை குறைந்தது. ஆனால் இன்று காலை மீண்டும் விலை உயர்ந்துவிட்டது. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 54 ரூபாய் விலை உயர்ந்து 15,491 ரூபாய்க்கும் 10 கிராம் 154,910 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 50 ரூபாய் விலை உயர்ந்து 11,980 ரூபாய்க்கும் ஒரு சவரன் 400 ரூபாய் உயர்ந்து 95,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதத்தில் சர்ரென விலை உயர்ந்திருக்கிறது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் இன்று ஒரு கிராம் 260 ரூபாயாக இருக்கிறது. அதாவது இந்த 12 நாட்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு 25 ரூபாயும் , ஒரு கிலோவுக்கு 25,000 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.
உலக சந்தையில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தான் இந்தியாவிலும் தங்கம், வெள்ளி விலைகள் மாறுகின்றன. ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை குறைந்தது. ஆனால் தற்போது பெரிய மோதல்கள் இல்லை என்பதாலும் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அதிகரிக்கும் வாய்ப்பு குறைந்ததாலும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் மீண்டும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். இதனால் தான் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டிங் விலை 4,400 டாலர்களை கடந்து வர்த்தகமாகிறது. வெள்ளி 65 டாலர்களாக இருக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,54,642 ரூபாய் என்ற விலையை தொட்டுள்ளது. ஜூன் மாத தொடக்கத்திற்கு பிறகு விலை இந்த அளவை எட்டியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

