• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அக்சென்சர் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு.. வேலை தான் இனி முக்கியம்.. லீவ் எடுக்காதீங்க..! | Accenture Asks Employees to Delay Vacations: Focus on Work to Rescue Weak Q4 Performance

GenevaTimes by GenevaTimes
August 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அக்சென்சர் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு.. வேலை தான் இனி முக்கியம்.. லீவ் எடுக்காதீங்க..! | Accenture Asks Employees to Delay Vacations: Focus on Work to Rescue Weak Q4 Performance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அக்சென்சர் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு.. வேலை தான் இனி முக்கியம்.. லீவ் எடுக்காதீங்க..!

டெக் உலகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக வேகமாக மாறி வரும் வேளையில் ஒவ்வொரு ஐடி சேவை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டு வரும் பொருட்டு அக்சென்சர் நிறுவனம் அடுத்த ஒரு மாதத்திற்கு விடுமுறையை ஒத்திவைத்து (லீவ் எடுக்காமல்) வேலை செய்து கூடுதல் வரத்தகத்தை உருவாக்க இந்நிறுவனத்தின் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

இது டெக் துறையில் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது, பொதுவாக டெக் நிறுவனங்களில் ஊழியர்களின் நலன் சார்ந்த விஷயத்தில் நிர்வாகம் எப்போதும் தலையீடாது, இதேபோல் அக்சென்சர் ஐயர்லாந்து நாட்டை தேர்ந்த நிறுவனமாக இருக்கும் காரணத்தால் ஊழியர்கள் நலன் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும். இதையும் தாண்டி இத்தகைய முடிவை எடுக்க என்ன காரணம்.

அக்சென்சர் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு.. வேலை தான் இனி முக்கியம்.. லீவ் எடுக்காதீங்க..!

அக்சென்சர் நிறுவனம் தனது 3வது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட போது, சந்தை கணிப்பையும், அதன் சேல்ஸ் மற்றும் புதிய வர்த்தகத்தின் டார்கெட்டை எட்ட முடியாத நிலையில் அதன் பங்குகள் சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்தது.

இந்த நிலையில் ஐயர்லாந்து நாட்டின் நிதியியல் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கும் வேளையில் ஆகஸ்ட் மாதம் அதிகப்படியான வர்த்தகத்தை உருவாக்க ஊழியர்கள் தங்களுடைய பயன்படுத்தாத விடுமுறையை அடுத்த நிதியாண்டில் எடுக்கும் படி அக்சென்சர் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதற்காக விடுமுறை கொள்கையில் முக்கியமான மாற்றத்தையும் செய்துள்ளதாக மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து அக்சென்சர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவம் வெளியிடவில்லை. மேலும் அக்சென்சர் நிறுவனத்தின் சிஇஓ ஆன ஜூலி ஸ்வீட் ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில், 4வது காலாண்டில் மிகவும் வலிமையான முடிவுகளை வெளியிடுவோம் என நம்முடைய பங்குதாரர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதை அடைய அனைவரின் பங்களிப்பும் அவசியம் என குறிப்பிட்டு உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இதன் பொருள் நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் மாற்று வகையில் சேவை அளித்து அதிகப்படியான வருவாயை இக்காலாண்டில் உருவாக்க வேண்டும். மேலும் சேல்ஸ் பிரிவில் இருந்து இக்காலாண்டில் சிறிய, நடுத்தர, பெரிய திட்டங்களை கொண்டு வந்து வலிமையாக முடிக்க வேண்டும் என பொருள்படுகிறது.

இதற்காகவே இந்த வருட விடுமுறையை அடுத்த ஆண்டு எடுத்துக்கொள்வதற்கான பாலிசி மாற்றத்தை கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மே மாதம் முடிந்த காலாண்டில் (மார்ச், ஏப்ரல், மே) புதிய வர்த்தக அளவு 2 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article

English summary

Accenture Asks Employees to Delay Vacations: Focus on Work to Rescue Weak Q4 Performance

Accenture Asks Employees to Delay Vacations: Focus on Work to Rescue Weak Q4 Performance — அக்சென்சர் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு.. வேலை தான் இனி முக்கியம்.. லீவ் எடுக்காதீங்க..!

Story first published: Monday, August 10, 2026, 11:56 [IST]

Other articles published on Aug 10, 2026

Read More

Previous Post

‘கேப்டன்சி’ ஆபர்.. கேகேஆர் அணி பக்கம் செல்லும் ஹர்திக் பாண்டியா.. அம்பானி கையில்தான் எல்லாம்! | Hardik Pandya: KKR offered to Captaincy to Hardik Pandya for the trade with Mumbai Indians in IPL 2027

Next Post

“நாங்களும் இழப்பீடு கோரப்போகிறோம்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு! | Donald Trump | America | Iran Isreal War | World News (உலக செய்திகள்)

Next Post
“நாங்களும் இழப்பீடு கோரப்போகிறோம்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு! | Donald Trump | America | Iran Isreal War | World News (உலக செய்திகள்)

“நாங்களும் இழப்பீடு கோரப்போகிறோம்” - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு! | Donald Trump | America | Iran Isreal War | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin