• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் விஷயத்திலும் சரி… காசா விஷயத்திலும் சரி… அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைவலியாக மாறி வருகிறார்.

நெதன்யாகு பேச்சு

“ஹமாஸ் உண்மையிலுமே முழுவதுமாக எப்போது ஆயுதமற்று ஆகிறதோ, அப்போது தான் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தைத் திரும்பப் பெறும்” என்று நெதன்யாகு நேற்று பேசியிருக்கிறார்.

கடந்த ஜூலை 30-ம் தேதி, ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “இன்று, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை ‘அமைதி குழு’ எட்டியுள்ளது” என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

நெதன்யாகு
நெதன்யாகு
“அமெரிக்காவுடன் நடப்பது பேச்சுவார்த்தை அல்ல; ‘செய்தி பரிமாற்றம்'” – ஈரான் அமைச்சரின் விளக்கம் என்ன?

இந்த அறிவிப்பிற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தான், அமெரிக்கா சென்று ட்ரம்பைச் சந்தித்திருந்தார் நெதன்யாகு.

இதனால், இந்த அறிவிப்பு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. ஆனால், நெதன்யாகுவின் நேற்றைய பேச்சு முரணாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் போரில் தடைக்கல்லாக நெதன்யாகு

இதே மாதிரி தான், ஈரான் விஷயத்திலும் சரி, ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மிகுந்த முனைப்புடன் இருக்கிறார். ஏற்கெனவே அவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியப்போது, அதற்கு தடைக்கல்லாக மாறியது லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.

லெபனானைத் தொட்டதும் ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது. இதனால், ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் தாக்குதல் தொடங்கிவிட்டது.

காசா பிரச்னை

காசாவில் இருக்கும் ஹமாஸ் இஸ்ரேலுக்கு வாழ்வாதார அச்சுறுத்தலாக இருக்கிறது. ஹமாஸிற்கு ஈரான் நிதி மற்றும் ஆயுத உதவி செய்து வருகிறது. நேரடியாக இல்லையென்றாலும், ஈரானும் இஸ்ரேலுக்கு ஒருவிதத்தில் வாழ்வாதார அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

அதனால், காசாவில் ஹமாஸை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது நிராயுதபாணியாக ஆக்க வேண்டும் என்பதும், ஈரானில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதும் இஸ்ரேலின் குறியாக இருக்கிறது.

அதற்காக தான் இப்போது வரை இஸ்ரேல் பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது.

அமைதி விரும்பி ட்ரம்ப்!

இந்த இரு போர்களும் ட்ரம்பிற்கு கௌரவ மற்றும் அரசியல் பிரச்னை.

ட்ரம்ப்
ட்ரம்ப்
“ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து” – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

2025-ம் ஆண்டு முழுவதுமே, உலக நாடுகளுக்கு இடையே அமைதியைக் கொண்டுவரும் ஒருவராக தன்னை முன்னிறுத்தினார் ட்ரம்ப். இதற்காக தனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கூட திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தார்.

உலக நாடுகளுக்கு இடையே அமைதியைக் கொண்டுவந்தேன் என்று ட்ரம்ப் கூறியதில், ‘இஸ்ரேல் – காசா ஒப்பந்தமும்’ மிக முக்கியமான ஒன்று.

ட்ரம்ப், ‘முடித்து வைத்தேன்’ என்று கூறும் போர் ஒன்றை, மீண்டும் தூசு தட்டி நெதன்யாகு எடுப்பதுப்போல தான், அவருடைய பேச்சு இருக்கிறது.

காசாவில் இருந்து இஸ்ரேல் முழுவதுமாக ராணுவத்தைத் திரும்ப பெறவில்லை என்றால், ஹமாஸும் தங்களுடைய ஆயுதங்கள் விட்டுத்தருவதில் தயக்கம் காட்டலாம். இது ட்ரம்பிற்கு கௌரவப் பிரச்னையாக போய் முடியும்.

பலமாக நிற்கும் ஈரான்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி இல்லையென்றால், ஈரானில் தானாக ஆட்சி மாற்றம் நடக்கும் என்று தான் அமெரிக்காவை ஈரான் போருக்குள் கூட்டி வந்தது இஸ்ரேல்.

ஆனால், கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழிந்தும், போர் களத்திலும் சரி… அரசியல் களத்திலும் சரி… ஈரானின் அரசு பலமாகவே நிற்கிறது.

ஆனால், இந்தப் போரால் ட்ரம்ப் மீது அமெரிக்காவில் அதிருப்தி எழுந்து வருகிறது. வருகிற நவம்பர் மாதம், மிட் டேர்ம் தேர்தல் அமெரிக்காவில் நடக்க உள்ளது.

ஈரான்
ஈரான்
உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா‌ கமேனி? வெளியான வீடியோ; முடிவுக்கு வந்த கேள்வி|Video

இதில் ஜனநாயகக் கட்சி அதிக சீட்டுகளைப் பெற்றுவிட்டால், இப்போது ட்ரம்ப் அனைத்து சட்டங்களையும் எளிதாகக் கொண்டுவருவது போல, இனி கொண்டு வரமுடியாது.

மேலும், அமெரிக்க ஆயுதக்கிடங்கிலும் ஈரான் போரினால் ஆயுதங்கள் குறைகின்றன என்கிற தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுவும் ட்ரம்பின் அரசுக்கு பெரும் பின்னடைவு.

ஈரான் போரை ட்ரம்பின் சொந்த கட்சியான குடியரசுக் கட்சியிலேயே பலரும் விரும்பவில்லை.

ட்ரம்பின் முயற்சி

மக்களுக்கும் பிடிக்கவில்லை… கட்சிக்கும் பிடிக்கவில்லை என்று ட்ரம்ப் ஈரான் போரை முடித்து நல்ல பெயரை எடுக்க ஒவ்வொரு முறை முயலும் போதும், இஸ்ரேல் குறுக்கே வந்துவிடுகிறது.

காசா போரின் போதும், ஈரான் போரின் போதும், நெதன்யாகு மீது ட்ரம்ப் கோபப்பட்டதாக, அவரை திட்டியதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின.

நெதன்யாகுவின் நேற்றைய பேச்சிற்குப் பிறகு, நிச்சயம் ட்ரம்பிற்கு கோபம் வந்திருக்கும். காரணம், ஈரான், காசா விஷயத்தில் இஸ்ரேல் முன்னெடுக்கும் ஒவ்வொரு நெகட்டிவ் நகர்வுகளும், ட்ரம்பின் இமேஜை ஏதோ ஒரு விதத்தில் பாதித்துக்கொண்டே இருக்கிறது.

அதனால், இஸ்ரேல் vs காசா, ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் என்பதை தாண்டி, ட்ரம்ப் vs நெதன்யாகு என களம் மாறலாம். இது வெளிப்படையாகத் தெரியாது தான். ஆனால், இந்தக் களத்தின் ஒவ்வொரு நகர்வுகளும் ஈரான், காசா போர் களத்தில் எதிரொலிக்கும்.

Read More

Previous Post

அதானி குழுமம் பொய் சொல்கிறது: ஆதாரத்துடன் புதிய குண்டை தூக்கி போட்ட மஹுவா மொய்த்ரா..!! | Adani Group Airline Plans Row: Mahua Moitra Alleges Contradiction in Stock Exchange Filing

Next Post

அன்வாருக்கு இன்று 79 வயதாகிறது, அவர் இரண்டு நாள் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுகிறார். – Malaysiakini

Next Post

அன்வாருக்கு இன்று 79 வயதாகிறது, அவர் இரண்டு நாள் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுகிறார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin