• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செயலிழந்த துப்பாக்கிகள் – மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செயலிழந்த துப்பாக்கிகள் – மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டின் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள போதிலும், அவை குறித்து முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் அங்குணகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அனுராதபுரம், கொழும்பு மகசின், மொனராகலை, வட்டரக்க மற்றும் வாரியப்பொல ஆகிய 9 சிறைச்சாலைகளிலேயே இவ்வாறு 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.

பாதுகாப்பு உபகரணங்கள் 

மேற்படி 9 சிறைச்சாலைகளிலும் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் (Unserviceable) உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

செயலிழந்த துப்பாக்கிகள் - மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல் | Audit Reveals Ammunition Deficit In Sl Prisons

அத்தோடு 27 சிறைச்சாலைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 1,038 பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதால், சிறைச்சாலைகளில் அவற்றுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.



9 சிறைச்சாலைகளில் இருந்த 62 துப்பாக்கிகள், 50 மெகசின்கள் (Magazines) மற்றும் 1,278 தோட்டாக்கள் பல்வேறு விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடுமையான தடைகள் 

அவை ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் வரையிலான நீண்ட காலம் கடந்துள்ள போதிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவை முறையான நடைமுறைகளின் கீழ் மீண்டும் சிறைச்சாலை நிர்வாகத்தால் பொறுப்பேற்கப்படவில்லை.

செயலிழந்த துப்பாக்கிகள் - மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல் | Audit Reveals Ammunition Deficit In Sl Prisons

இதனடிப்படையில் சிறைச்சாலைகளில் திடீரென வெடிக்கும் கலவரங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின் போது அவற்றை எதிர்கொள்வதில் சிறை அதிகாரிகளுக்குப் பாரிய நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.


மேலும் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைப் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் பொதுப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தடைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98-ஆக உயர்வு; 13 மாவட்டங்களில் 1.55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

Next Post

“ஆம்பளகிட்ட பேசாதேம்மா” பெற்ற தாய்க்கு கொடூர பரிசு தந்த பானிபூரி வியாபாரி! திருப்பத்தூரில் பரபரப்பு | “Don’t Talk to Any Man!” Pani Puri Vendor Kills Mother Over Shocking Condition in Tirupattur

Next Post
“ஆம்பளகிட்ட பேசாதேம்மா” பெற்ற தாய்க்கு கொடூர பரிசு தந்த பானிபூரி வியாபாரி! திருப்பத்தூரில் பரபரப்பு | “Don’t Talk to Any Man!” Pani Puri Vendor Kills Mother Over Shocking Condition in Tirupattur

"ஆம்பளகிட்ட பேசாதேம்மா" பெற்ற தாய்க்கு கொடூர பரிசு தந்த பானிபூரி வியாபாரி! திருப்பத்தூரில் பரபரப்பு | "Don't Talk to Any Man!" Pani Puri Vendor Kills Mother Over Shocking Condition in Tirupattur

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin