Last Updated:
2026 ஆகஸ்ட் 1 அன்று வெளியான ஊடகச் செய்தியின் படி, பாதிக்கப்பட்ட மாணவன் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியதன் மூலம் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்திலுள்ள உக்காவல் கிராமத்தில் 2026 ஜூலை 28 அன்று அரசுத் தொடக்கப்பள்ளியில் சாதி ரீதியிலான இழிச்சொற்களைக் கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்ததுக் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.


