ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்த தொழில்முனைவோர் ஒருவர், கோபத்தை வெளிப்படையாகக் காட்டாமல், கொடூரமான முறையில் உடலுறவுக்கு உட்படுத்தி அவரைப் பலிவாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ராஜேந்திர பிரசாத் சர்மா, தனது தொழில் பணிகளில் பிஸியாக இருந்த வேளையில், அவரது மனைவி கவிதா சர்மாவுக்கும், அவர்களது கார் சாரதி முகேஷ் யாதவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தத் தொடர்பு எல்லை மீறியதை கவிதாவின் தொலைபேசி வாயிலாக ராஜேந்திர பிரசாத் அறிந்துகொண்டார்.
மனைவியுடன் சண்டையிடுவதைத் தவிர்த்த அவர், மிக அமைதியாக ஒரு கொடூரமான பழிவாங்கும் திட்டத்தைத் தீட்டினார். அதன்படி, திட்டமிட்டுத் தொடர்ந்து பல மணி நேரம் மனைவியை உடல் ரீதியான உறவுக்கு வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு நாளைக்கு இருமுறை, ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை நீடித்த இந்தத் தீவிரமான நெருக்கம், கவிதாவுக்குக் கடுமையான உடல் உபாதைகளையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் இந்தச் சித்திரவதையின்போது கவிதாவுக்குக் கடுமையான வலியும் இரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேந்திர பிரசாத் மருத்துவமனைக்குத் தகவல் அளித்துவிட்டு, இயற்கையான மரணம் போல நாடகமாடியுள்ளார்.
எனினும், காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் கவிதாவின் தொலைபேசிச் செய்திகள் அம்பலமாகின. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கவிதாவின் உடலில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட கடுமையான காயங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. விசாரணையில் ராஜேந்திர பிரசாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; சாரதி முகேஷ் மீதும் தீவிர விசாரணை நடாத்தப்பட்டு வருகிறது.


