• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பெங்ளூருக்கு போட்டியாக சென்னை Wonderla.. மக்கள் கூட்டம் நிரம்பி வழியுது.. அமோக வரவேற்பு! | Chennai Wonderla Draws 2.4 Lakh Visitors in First Quarter, Rivals Bengaluru Park’s Popularity

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பெங்ளூருக்கு போட்டியாக சென்னை Wonderla.. மக்கள் கூட்டம் நிரம்பி வழியுது.. அமோக வரவேற்பு! | Chennai Wonderla Draws 2.4 Lakh Visitors in First Quarter, Rivals Bengaluru Park’s Popularity
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்ளூருக்கு போட்டியாக சென்னை Wonderla.. மக்கள் கூட்டம் நிரம்பி வழியுது.. அமோக வரவேற்பு!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொழுதுப்போக்கு அம்சம் அதிகமாக வேண்டும் என்பதற்காக தனி கொள்கை உருவாக்கியதன் மூலம் பெங்களூர், கொச்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் வொண்டர்லா சென்னையில் தனது முதல் தீம் பார்க் அமைக்க திட்டமிட்டப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து.

ஆனால் இந்த தீம் பார்க் வருவதில் சில சிக்கல்கள் இருந்தாலும், கடந்த ஆட்சியில் இதை தீர்க்கப்பட்டு கட்டுமானம் முடிந்து வொண்டர்லா தீம் பார்க் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் Wonderla Holidays நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது 5 தீம் பார்க்குகளில் வரும் மக்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

பெங்ளூருக்கு போட்டியாக சென்னை Wonderla.. மக்கள் கூட்டம் நிரம்பி வழியுது.. அமோக வரவேற்பு!

இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் சென்னை தீம் பார்க் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே அதன் முக்கிய தீம் பார்க்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது என்பது தான்.

ஜூன் காலாண்டில் பெங்களூர் வொண்டர்லா தீம் பார்க்கில் சுமார் 3.4 லட்சம் மக்களை ஈர்த்துள்ள நிலையில் சென்னை தீம் பார்கில் 2.4 லட்சம் பேர் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஹைதராபாத்-ன் 2.9 லட்சம் பேருக்கும் மற்றும் கொச்சியின் 2.5 லட்சம் பேர் எண்ணிக்கையை நெருங்கிவிட்டது. கடைசி இடத்தில் புவனேஸ்வரில் 1 லட்சம் பேர் வந்துள்ளனர்.

பொதுவாக ஒரு தீம் பார்க் கட்டி முடித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், விருப்பத்தையும் பெற சில காலம் ஆகும், ஆனால் சென்னை வொண்டர்லா குறுகிய காலத்தில் மக்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

சென்னை தற்போது பல வகையில் வளர்ச்சி அடைந்திருக்கும் வேளையில் மக்கள் மத்தியில் ப்ரீமியம் பொழுதுபோக்கு இடத்திற்கான தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே குறுகிய காலக்கட்டத்தில் அதிகப்படியான மக்களை ஈர்த்துள்ளது.

மேலும் இந்த ஜூன் காலாண்டு விடுமுறை காலம் என்பதாலும் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது. வென்டர்லா-வின் வெற்றி இன்னும் பல ப்ரீமியம் பொழுதுபோக்கு நிறுவனங்களை சென்னையில் முதலீடு செய்ய வைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வேகமாக வளர்ந்து வரும் வேளையில், பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அவசியமாக உள்ளது. ஒரு நகரத்தில் முதலீடுகளை ஈர்க்க அனைத்து விதமான கட்டமைப்பும் அவசியம் இதில் பொழுதுபோக்கு, நைட் லைப், கொண்டாட்டங்களுக்கான வாய்ப்பு போன்றவையும் அவசியம். மேலும் சென்னையின் வொண்டர்லா இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் கொண்ட தீம் பார்க் ஆகவும் விளங்குகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க், சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவானது. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், வொண்டர்லா நிறுவனம் சென்னையில் அம்யூஸ்மென்ட் பார்க் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டம் தாமதமாகி 2025ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி தான் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. டிசம்பர் 1ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தீம் பார்க்-ஐ திறந்து வைத்தார்.

Share This Article

English summary

Chennai Wonderla Draws 2.4 Lakh Visitors in First Quarter, Rivals Bengaluru Park’s Popularity

Chennai Wonderla Draws 2.4 Lakh Visitors in First Quarter, Rivals Bengaluru Park’s Popularity — பெங்ளூருக்கு போட்டியாக சென்னை Wonderla.. மக்கள் கூட்டம் நிரம்பி வழியுது.. அமோக வரவேற்பு!

Story first published: Thursday, August 6, 2026, 15:08 [IST]

Other articles published on Aug 6, 2026

Read More

Previous Post

அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்.. பல கிராமங்கள் துண்டிப்பு.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ட்ரம்ப் விதித்த வரி ரத்து: $100 பில்லியன் ரீஃபண்ட் செய்த அமெரிக்கா|Trump’s Tariff Blowback: $100 Billion Paid Back

Next Post
ட்ரம்ப் விதித்த வரி ரத்து: $100 பில்லியன் ரீஃபண்ட் செய்த அமெரிக்கா|Trump’s Tariff Blowback: $100 Billion Paid Back

ட்ரம்ப் விதித்த வரி ரத்து: $100 பில்லியன் ரீஃபண்ட் செய்த அமெரிக்கா|Trump's Tariff Blowback: $100 Billion Paid Back

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin