Last Updated:
எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகை 7,000 மீட்டர் உயரம் வரை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குவாத்தமாலாவில் உள்ள ஃபுவேகோ எரிமலை மீண்டும் சீற்றத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த எரிமலை சாம்பல், புகை மற்றும் நெருப்பு குழம்பை கக்கியது. இதனால், எரிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்காக 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகை 7,000 மீட்டர் உயரம் வரை எழுவதுடன், 120 கிலோமீட்டர் தூரம் வரை பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறும் என்ற அச்சத்தால் சிலர் வெளியேற மறுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Aug 06, 2026 12:13 PM IST

