• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியில் மாற்றுவது? ஊழியர்கள் மாற்றி தரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? | How to Replace Damaged Currency Notes If a Bank Refuses

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியில் மாற்றுவது? ஊழியர்கள் மாற்றி தரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? | How to Replace Damaged Currency Notes If a Bank Refuses
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியில் மாற்றுவது? ஊழியர்கள் மாற்றி தரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

எங்கோ ஏதோ ஒரு மூலையில் நாம் செய்யும் பரிவர்த்தனையின் பொது கிழிந்த ரூபாய் நோட்டுகள் எதிர்பாராத விதமாக நம் கையில் கிடைத்துவிடும். அதுவும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது பொதுவான பிரச்சனை. ஒரு சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் அவர்களிடம் கிழிந்த அல்லது அழுக்கடைந்த நோட்டுகளை வழங்கி விடுவார்கள். அவர்களுக்கும் யாரோ ஒருவர் தெரியாமல் தான் அந்த நோட்டை கொடுத்திருப்பார்கள்.

இப்படி உங்களிடமும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. அதற்காக ஆர்பிஐ சில விதிகளை வகுத்துள்ளது. கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். கிழிந்த நோட்டை திரும்பப் பெறும் விதிகள் 2009-இன் கீழ் ஒருவர், கிழிந்த ரூபாய் நோட்டை கொடுத்தால் வங்கியின் சார்பில் கட்டாயம் மாற்றி தர வேண்டும்.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியில் மாற்றுவது? ஊழியர்கள் மாற்றி தரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி கிளைக்கு செல்ல வேண்டுமா?: ஒரு சிலர் கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக தாங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி கிளைக்கு செல்கின்றனர். அப்படியும் மாற்றிக் கொள்ளலாம், ஆனால் விதிகளின்படி எந்த ஒரு கமர்சியல் வங்கி கிளையில் வேண்டுமானாலும் நீங்கள் கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றலாம். இதற்கு எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

எந்தெந்த நோட்டுகளை மாற்றலாம்?: அழுக்கான நோட்டுகள், இரண்டு துண்டுகளாக கிழிந்த நோட்டுகள், ரூபாய் நோட்டின் ஓரங்களில் மட்டும் சேதமடைந்த நோட்டுகள், அச்சுப் பிழை இருக்கும் நோட்டுகள் என எந்த நோட்டாக இருந்தாலும் சரி உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் வணிக வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

வங்கி நோட்டை வாங்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும்?: சில நேரங்களில் பணி புரியும் ஊழியர்கள் உங்களிடம் கிழிந்த நோட்டுகளை வேண்டாம் என்று மறுக்கலாம். இது போன்ற சூழலில் நீங்கள் தாராளமாக புகார் அளிக்க முடியும். அதற்கு முதலில் வங்கியின் மேனேஜரை சந்தித்து புகார் செய்யுங்கள். நடவடிக்கை எடுக்க வங்கிக்கு நாம் 30 நாட்கள் வரை அவகாசம் வழங்க வேண்டும். எனவே ஒரு மாதம் வரை காத்திருங்கள்.

30 நாட்கள் கடந்தும் வங்கி உங்களுக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்றாலோ அல்லது உங்களுடைய கிழிந்த நோட்டுகளை திருப்பி மாற்றி தரவில்லை என்றாலோ.. நீங்கள் நேரடியாக ஆர்பிஐ குறை தீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பதற்கும் நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான சிஎம்எஸ் போர்ட்டல் வழியாக ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தே புகாரை பதிவு செய்யலாம். ஒரு வேலை உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் 14448 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.

ரூபாய் நோட்டுகள் நம் நாட்டின் சொத்து. அவற்றை மாற்றும் உரிமை சட்டபூர்வமாகவே உங்களுக்கு உள்ளது. எனவே அடுத்த முறை அழுக்கான அல்லது கிழிந்த நோட்டு உங்களிடம் கிடைத்தால் அதை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பதற்கு பதிலாக அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று மாற்றி பயன்படுத்துங்கள்!

Share This Article

Story first published: Wednesday, August 5, 2026, 19:51 [IST]

Other articles published on Aug 5, 2026

Read More

Previous Post

ஹர்திக் பாண்டியா டீல் ஓவர்.. யாரும் கவலைப்படத் தேவையில்லை.. உண்மையை சொன்ன அஸ்வின் நண்பர்! | Hardik Pandya: Former RCB Analyst Prasanna Claims Hardik Pandya – Dube Swap Finalized Between CSK and MI

Next Post

சரவாக்கில் உள்ள பள்ளி கழிவறையில் ஆசிரியர் சடலமாக மீட்பு – Malaysiakini

Next Post

சரவாக்கில் உள்ள பள்ளி கழிவறையில் ஆசிரியர் சடலமாக மீட்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin