Last Updated:
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று யுபிஎஸ்ஸை தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் விருப்பத்தின்பேரில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த எழுத்துபூர்வமான பதிலில், ‘யுபிஎஸ்ஸில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை’ என கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி நிலவரப்படி, புதிதாக இணைந்தவர்கள், தற்போதைய ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என்று சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் யுபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்து உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று யுபிஎஸ்ஸை தேர்வு செய்வதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


