International
oi-Mani Singh S
வாஷிங்டன்: இந்திய கொடியுடன் செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை கொண்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமன் மேற்கு கடல் பகுதியில் சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. MSV Faize Noore Oliya என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 14 மாலுமிகள் இருந்துள்ளனர்.
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக ஏமன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விரைந்து வந்த ஏமன் குழுவினர் கப்பலில் இருந்த அனைவரையும் மீட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கப்பல் செங்கடலில் மூழ்க தொடங்கியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பட்டில் உள்ள ஹோடைடா துறைமுக நகரத்திற்குத் தெற்கே சுமார் 13 கடல் மைல் தொலைவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.


