• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!! | RBI MPC Meeting 2026: Will Home Loan and Car Loan EMIs Rise or Stay Unchanged?

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!! | RBI MPC Meeting 2026: Will Home Loan and Car Loan EMIs Rise or Stay Unchanged?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு (MPC) கூட்டம், நாளை தொடங்கி ஆகஸ்ட் 5 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நம் வீட்டு கடன், வாகன கடன் வட்டிகளில் மாற்றத்தை கொண்டு வரப்போகின்றன.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடைபெறும் நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வெளியாகும். தற்போதைய பொருளாதார சூழல், பணவீக்கம் மற்றும் நாட்டின் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும்.

வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!!

பொருளாதார நிபுணர்கள் தற்போதைய வட்டி விகிதங்கள் மாற்றமின்றி நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். வங்கிகள் தங்களுக்குத் தேவையான பணத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாக பெறும்போது, அதற்கு ரிசர்வ் வங்கிக்கு வட்டி கொடுக்க வேண்டும். இந்த வட்டி விகிதமே ரெப்போ விகிதம் என அழைக்கப்படுகிறது. இதுவே நாட்டின் ஒட்டுமொத்த வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் அளவுகோல்.

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீட்டுகடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். அதே போல வட்டி விகிதம் குறைந்தால் நம் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும். இதன் விளைவாக, நம் EMI அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.

பெரும்பாலான வீட்டுகடன்கள், வாகன கடன்கள் ஃபுளோட்டிங் வட்டி வகையை சேர்ந்தவை. எனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றினால், உங்கள் EMI கூடும், வட்டி விகிதம் குறைந்தால் உங்கள் EMI செலவு குறையும்.எனவே ஆகஸ்ட் 5ஆம் தேதி அறிவிக்கப்படும் முடிவுகள், உங்கள் பாக்கெட்டையே பதம் பார்க்கும். ஒரு வேளை வட்டி மாற்றப்படவில்லை என்றால் EMIஇல் மாற்றம் இருக்காது.

அண்மையில் தான் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடந்தது. அதில் வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. பெரும்பாலும் இந்திய ரிசர்வ் வங்கியும் அதனையே பின்பற்றும் என சொல்லப்படுகிறது. ஈரான் போர் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, விலைவாசி, மக்களிடையே பணப்புழக்கம் ஆகியவற்றை எல்லாம் விவாதித்து தான் ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை கையில் எடுக்கும்.அந்த வகையில் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு முக்கியமான ஒரு வாரமாக இது இருக்க போகிறது. ரெப்போ வட்டி விகித மாற்றம் நம் ஃபிக்சட் டெபாசிட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Share This Article

English summary

RBI MPC Meeting 2026: Will Home Loan and Car Loan EMIs Rise or Stay Unchanged?

வீட்டு கடன், வாகன கடன் வட்டி உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!!- The RBI’s Monetary Policy Committee meeting from August 3 to 5 will decide whether the repo rate changes or remains unchanged, directly affecting home loan, car loan, personal loan, and fixed deposit interest rates.

Story first published: Sunday, August 2, 2026, 8:11 [IST]

Read More

Previous Post

ஈரானை சிதைக்க பென்டகன் சமர்ப்பித்த திட்டம்! உறுதிப்படுத்திய ட்ரம்ப்

Next Post

போருக்கு முந்தைய இயல்பான நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் செல்லாது – ஈரான் அதிகாரி  – Malaysiakini

Next Post
போருக்கு முந்தைய இயல்பான நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் செல்லாது – ஈரான் அதிகாரி  – Malaysiakini

போருக்கு முந்தைய இயல்பான நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் செல்லாது – ஈரான் அதிகாரி  – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin