Last Updated:
மொராக்கோவில் வறுமையால் ஸ்பெயினுக்குள் நுழைந்த 48,000 பேர் உணவு கிடைக்காததால் திரும்பிச் சென்றனர். 67 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஸ்பெயின் சியூட்டா நகரைச் சுற்றி தடுப்பு அமைக்கிறது.
மொராக்கோவில் நிலவும் வறுமை காரணமாக, ஸ்பெயின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வாழ முயற்சி செய்தவர்களுக்கு, அங்கும் உணவு கிடைக்காததால் பலர் சொந்த நாட்டுக்கே திரும்பி சென்றுள்ளனர்.
மொராக்கோவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை காரணமாக மக்கள் வறுமையில் வாடுகின்றனர். உணவுப்பொருள் பற்றாக்குறை, உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால், மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அண்டை நாடான ஸ்பெயினுக்குள் அவ்வப்போது ஊடுருவி வருகின்றனர். இந்நிலையில், ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள வளமான சியூடா நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரை பணயம் வைத்து கடல் வழியாகவும் நிலப்பகுதி வழியாகவும் ஊடுருவினர்.
எனினும், அவர்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மொராக்கோவுக்கே திரும்பிவிட்டனர். ஸ்பெயினில் நிலவில் உள்ள ராணுவக் கட்டுப்பாட்டாலும், ஒரு நாள் முழுவதும் உணவு கிடைக்காத நிலையிலும் அவர்கள் திரும்பிச்சென்றுள்ளனர். நெரிசலில் சிக்கி 67 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஸ்பெயின் அரசு சியூட்டா நகரைச் சுற்றி 500 மீட்டர் தொலைவுக்கு மிதக்கும் தடுப்பு அமைத்து வருகிறது

