Last Updated:
PM Kisan | விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டமான ‘பிரதமர் கிஸ்ஸான்’ திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டமான ‘பிரதமர் கிஸ்ஸான்’ திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மிதவை சோலார் திட்ட மேம்பாடு, விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம், கேலோ இந்தியா மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு நிதியுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டமான ‘பிரதமர் கிஸ்ஸான்’ திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க 3 லட்சத்து 15 ஆயிரத்து 614 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சோலார் அமைக்கும் திட்டத்தின் கீழ் தற்போது 700 மெகாவாட் அளவிற்கு சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதை 7 மடங்காக அதிகரிக்க 5 ஆயிரத்து 70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கேலோ இந்தியா திட்டத்திற்கு 29 ஆயிரத்து 54 கோடி ரூபாயும், விளையாட்டு கூட்டமைப்பு நிதியுதவி திட்டத்திற்கு 7 ஆயிரத்து 387 கோடி ரூபாயும், ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் ’சமுத்ர மந்தன்’ திட்டத்திற்கு 84 ஆயிரத்து 84 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
PM Kisan | ‘பிரதமர் கிஸ்ஸான்’ திட்டம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அரசு.. ரூ. 3,15,614 கோடி நிதி…!


