Last Updated:
நிஃப்டி 50 குறியீட்டில் Bajaj Finance, Bajaj Finserv, Jio Financial Services, Mahindra & Mahindra உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் வலிமையான ஏற்றத்தை பதிவு செய்தன.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதாரம், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவற்றை பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து, 13 ஆயிரத்து 255 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமின்றி கிராம் 235 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் கடைசி வர்த்தக நாளை ஏற்றத்துடன் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 94 புள்ளிகளுடனும், நிஃப்டி 66 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 383 புள்ளிகளுடனும் நிலைபெற்றன. குறிப்பாக, நிஃப்டி 50 குறியீட்டில் Bajaj Finance, Bajaj Finserv, Jio Financial Services, Mahindra & Mahindra உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் வலிமையான ஏற்றத்தை பதிவு செய்தன.


