அக்குழுவில் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், கடலோர வள மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்ற பின்வரும் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நிபுணர்கள்
* பேராசிரியர் எஸ்.கண்மணி, தலைவர், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் (CCCDM), அண்ணா பல்கலைக்கழகம் அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்படும் CCCDM-இன் மாற்று இயக்குநர்.
* பாலாஜி நரசிம்மன், பேராசிரியர், நீரியல் மற்றும் நீர்வளப் பொறியியல் ஆய்வகம், குடிசார் பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை.
* அறிவுடை நம்பி அப்பாதுரை, இயக்குநர், காலநிலை மீள்திறன் பிரிவு, WRI இந்தியா; உறுப்பினர், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுமைக் குழு.
* பேராசிரியர் ரமேஷ் ராமச்சந்திரன், ஆலோசகர், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம். நிபுணர் உறுப்பினர் – நிலையான மற்றும் காலநிலை மீள்திறன்
கொண்ட நீலப் பொருளாதாரத்தை (Blue Economy) மேம்படுத்துதல்.
* டாக்டர் ஆர்.வெங்கடேசன், நிபுணர் உறுப்பினர் – மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு; நிபுணர் உறுப்பினர் தொழில்நுட்ப நிபுணர் குழு (CRZ) மற்றும் TNMRF.
* டாக்டர் ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட், இயக்குநர்- சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI)-பவளப்பாறைகள், கடற்புல் சூழலமைப்பு, கடல்சார் உயிரினப் பன்மை மற்றும் கடலோர சூழலமைப்பு மீட்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களின் தலைமைப் பொறுப்பாளர்.
* திரு.ஆர். பிரதீப் ஜான், மூத்த மேலாளர், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL).
