Last Updated:
நிஃப்டி 50 குறியீட்டில் Jio Financial Services, Hindustan Unilever, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஒரே நாளில் அதிகபட்சமாக 5 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 155 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி கிராம் 235 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.


