• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்? | Why do Tamil Nadu government employees oppose the new medical insurance scheme?

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்? | Why do Tamil Nadu government employees oppose the new medical insurance scheme?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Velmurugan P

Time
Published: Wednesday, July 29, 2026, 14:05 [IST]

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள், குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு ஜூலை 1 முதல் புதிய மருத்​துவ காப்​பீட்டு திட்​டம் அமல்​படுத்​தப்​பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு நகரங்களில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு சிகிச்சை பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அண்மையில் தமிழக அரசின் நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் வெளியிட்டிருந்த இரு அரசாணை​களில் : தமிழக அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு புதிய மருத்​துவ காப்​பீட்டு திட்​டம்​-2026 அமல்​படுத்​தப்படுகிறது.

Why do Tamil Nadu government employees oppose the new medical insurance scheme

யுனைடெட் இந்​தியா இன்​சூரன்ஸ்

யுனைடெட் இந்​தியா இன்​சூரன்ஸ் நிறு​வனம் மூலம் செயல்​படுத்​தப்​படும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2026 ஜூலை 1 முதல் 2031-ம் ஆண்டு ஜூன் 30-ம் வரை 5 ஆண்டு காலம் நடை​முறை​யில் இருக்​கும் என்று குறிப்பிட்டிருந்தார். புதிய மருத்​துவ காப்​பீட்டு திட்​டத்​தின்​படி, அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் (வாழ்க்கை துணை உள்​பட) மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​ய​தார்​களும் அங்​கீகரிக்​கப்​பட்ட மருத்​து​வ​மனை​களில் ரூ.7.50 லட்​சம் வரை பணமில்லா முறை​யில் மருத்​துவ உதவி பெறலாம் என்றும் நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் அரசாணையில் விளக்கம் அளித்திருந்தார்.

டாஸ்மாக் தனியார் மயம்.. தமிழக அரசுக்கு எவ்வளவு லாபம் வரும் தெரியுமா?

டாஸ்மாக் தனியார் மயம்.. தமிழக அரசுக்கு எவ்வளவு லாபம் வரும் தெரியுமா?

46 வகையான தீவிர நோய்கள்

அதேபோல் 46 வகை​யான தீவிர நோய்​களுக்கு ஒரு குடும்​பத்​துக்கு ரூ.12 லட்​சம் வரை மருத்​துவ சிகிச்சை பெறலாம் என்றும், இத்​திட்​டத்​தில் 2,992 சிகிச்​சைகள், அறுவை சிகிச்​சைகள் சேர்க்​கப்​பட்​டுள்​ளது என்றும், 1535 தனி​யார் மருத்​து​வ​மனை​கள், அரசு மருத்​து​வ​மனை​கள் இணைக்​கப்​பட்​டுள்​ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறைந்த ஊதியம்

மேலும் அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், தூய்மை பணி​யாளர்​கள், சத்​துணவு ஊழியர்​கள் உ்ள்​ளிட்ட பணி​யாளர்​களும் இந்த திட்​டத்​தில் சேர்க்​கப்​படு​கிறார்​கள். குறைந்த ஊதி​யம் பெறும் ஊழியர்​களின் பிரீமி​யத்தை தமிழக அரசே ஏற்​றுக்​கொள்​ளும். இந்த புதிய மருத்​துவ காப்​பீட்டு திட்​டம், சிபிஎஸ் திட்​டத்​தில் ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்​களுக்​கும் (வாழ்க்கை துணை உள்​பட), தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்ட (டேப்​ஸ்) ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்​கும் பொருந்​தும் என்றும் அரசின் அரசாணை​களில்​ கூறப்​பட்​டுள்​ளது.

ப்ரீமியம் தொகை பிடித்தம்

இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள், குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் ப்ரீமியம் தொகை கட்டாயமாக பிடித்தம் செய்கிறார்கள். இதனால் பல ஆயிரம் கோடி நிதி தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிறது என்கிறார்கள். கட்டணமில்லா மருத்துவத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், ப்ரீமியம் தொகை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று வலியறுத்துகின்றனர். இதற்காகவே தமிழ்நாட்டின் அனைத்து வட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்கள்.

வீடுகளில் புதிய சோலார் மின் இணைப்பு வாங்க போறீங்களா.. அமைச்சர் நிர்மல் குமார் குட்நியூஸ்

வீடுகளில் புதிய சோலார் மின் இணைப்பு வாங்க போறீங்களா.. அமைச்சர் நிர்மல் குமார் குட்நியூஸ்

644 ரூபாய் பிடிக்கப்படுகிறது

புதிய காப்பீடு திட்டப்படி ஓர் அரசு ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.4,500 தவணை தொகையை அவர்களது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.390 பிடித்தம் செய்து, கூடுதல் தொகையை அரசு செலுத்தி வருகிறது. அதேபோல் ஓய்வூதியருக்கு ஆண்டுக்கு ரூ.7,728 தவணைத் தொகையை ஓய்வூதியத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.644 பிடித்தம் செய்கிறது. ஆனால் சிகிச்சைக்கான தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

12 லட்சம் அரசு ஊழியர்களிடம் 128 கோடி

ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், 11 லட்சம் ஓய்வூதியதாரர்களிடமிருந்து காப்பீட்டுத் திட்ட மாதத் தவணைக்காக ரூ.128 கோடி அளவுக்கு ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படுவதாக அரசு ஊழியர்கள் புள்ளி விவரங்களை கூறுகிறார்கள். அதேபோல் சிகிச்சை தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டாலும், எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை என்ற விவரம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

கண்புரை, கர்ப்பப்பை அகற்றம் சிகிச்சைகள் நீக்கம்

அதேபோல் கண்புரை, கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் காப்பீட்டு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல் காப்பீடு திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால் திரும்ப வழங்கும் தொகை 75 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதையும் அரசு ஊழியர்கள் எதிர்க்கிறார்கள். அரசாணையில் கடந்த காலங்களில் இருந்த கட்டணமில்லா சிகிச்சை, 3 மாதங்களுக்கு ஒருமுறை காப்பீட்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் என்ற பதம் இடம்பெறவில்லை என்பதும் அரசு ஊழியர்களின் குறையாக உள்ளது.

கேரளா பாணியை விரும்பும் அரசு ஊழியர்கள்

அதேபோல் கேரளா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல், மாநில அரசே காப்பீட்டுத் திட்டத்தை கையில் எடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு தான் போராடி வருவதுடன், புதிய காப்பீடு திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

English summary

A new medical insurance scheme for government employees, pensioners, and family pensioners in Tamil Nadu has been implemented effective July 1. In this post, we will examine why Tamil Nadu government employees are opposing this new scheme.

Read More

Previous Post

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!

Next Post

Sharmila Dhankar | பெண் குழந்தைகள் பெற்றதால் கணவரால் விரட்டப்பட்டவர்.. இன்று காமன்வெல்த் தங்கம் வென்று சாதனை!

Next Post
Sharmila Dhankar | பெண் குழந்தைகள் பெற்றதால் கணவரால் விரட்டப்பட்டவர்.. இன்று காமன்வெல்த் தங்கம் வென்று சாதனை!

Sharmila Dhankar | பெண் குழந்தைகள் பெற்றதால் கணவரால் விரட்டப்பட்டவர்.. இன்று காமன்வெல்த் தங்கம் வென்று சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin