• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புடின் எடுத்த முடிவு.. மோசமான நிலையில் ரஷ்ய அரசு.. தங்கத்தை தொடர்ந்து வைரத்தை விற்கும் ரஷ்யா! | Russia to Auction State Diamonds After Selling 43.5 Tonnes of Gold – Putin’s Latest Move to Plug Budget Deficit

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
புடின் எடுத்த முடிவு.. மோசமான நிலையில் ரஷ்ய அரசு.. தங்கத்தை தொடர்ந்து வைரத்தை விற்கும் ரஷ்யா! | Russia to Auction State Diamonds After Selling 43.5 Tonnes of Gold – Putin’s Latest Move to Plug Budget Deficit
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புடின் எடுத்த முடிவு.. மோசமான நிலையில் ரஷ்ய அரசு.. தங்கத்தை தொடர்ந்து வைரத்தை விற்கும் ரஷ்யா!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஓன்றான ரஷ்யா, உக்ரைன் உடனான போர் மூலம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 2022ல் துவங்கிய இந்த போர் சுமார் 4 வருடங்களாக நடந்து வருவது மட்டும் அல்லாமல் ரஷ்யாவின் வர்த்தகத்தை முடக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்த கட்டுப்பாடுகள் ரஷ்யாவின் பொருளாதாரம், வர்த்தகம், நிதிநிலையை பெரிய அளவில் பாதித்துள்ளது.

போர் மூலம் உருவான செலவுகளை கடந்த 3 வருடமாக சமாளித்து வந்த ரஷ்ய அரசு, கடந்த ஒரு வருடமாக பெரிய அளவிலான நிதி பற்றாக்குறையில் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த நிதி பற்றாக்குறையை குறைக்க ரஷ்ய அரசும், அந்நாட்டின் மத்திய வங்கியும் கருவூலத்தில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து நிதியை திரட்டி போருக்கும், மக்களுக்குமான சேவைகளை அளித்து வந்தது.

 புடின் எடுத்த முடிவு.. மோசமான நிலையில் ரஷ்ய அரசு.. தங்கத்தை தொடர்ந்து வைரத்தை விற்கும் ரஷ்யா!

கடந்த 6 மாதத்தில் 43.5 டன் தங்கத்தை விற்பனை செய்து பணமாக்கியுள்ளது ரஷ்ய அரசு. ஆனாலும் நிதி நெருக்கடி குறைந்தபாடில்லை. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக ரஷ்யாவுக்கே பெயர்போன வைரத்தை ஏலம் விட முடிவு செய்துள்ளது ரஷ்ய அரசு, இதற்கான பணிகளையும் தற்போது துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு கருவூலத்தில் இருக்கும் வைரத்தை ஏலம் விட புடின் தலைமையிலான அரசு முடிவு செய்த நிலையில், அந்நாட்டின் நிதியமைச்சகம் செப்டம்பர் 9ஆம் தேதியை மிகவும் முக்கிய வர்த்தகர்கள் அடங்கிய ஏலத்தை நடந்த நாள் குறித்துள்ளது.

இதைவிட முக்கியமாக இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள முக்கியமான கடுப்பாடுகளையும் ரஷ்யா விதித்துள்ளது, இந்த ஏலத்தில் ரஷ்ய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும் என்றும், கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கல் 2500 டாலர் முன்பணம் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. இதேபோல் இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரஷ்யா தஙக்ததை அடுத்த வைரத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இதுக்குறித்து உக்ரைன் நாட்டின் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள செய்தியில் ரஷ்யா கடந்த 6 மாதத்தில் 445 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது, இதேபோல் ப்ளூம்பெர்க் மார்ச் மாதம் ரஷ்யா 4 பில்லியன் டாலர் அளவிலான தங்கத்தை விற்றுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் இதற்கு ரஷ்ய தரப்பில் எவ்விதமான மறுப்பும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.

ஒரு வீட்டில் எப்படி ஆபத்தான காலக்கட்டத்தில் தங்கம் முக்கிய முதலீடாக உள்ளதோ, அதேபோல் ஒரு நாட்டிற்கு ஆபத்துக் காலக்கட்டத்தில் தங்கம் முக்கிய முதலீடாக உள்ளது.

Share This Article

English summary

Russia to Auction State Diamonds After Selling 43.5 Tonnes of Gold – Putin’s Latest Move to Plug Budget Deficit

Russia to Auction State Diamonds After Selling 43.5 Tonnes of Gold – Putin’s Latest Move to Plug Budget Deficit — புடின் எடுத்த முடிவு.. மோசமான நிலையில் ரஷ்ய அரசு.. தங்கத்தை தொடர்ந்து வைரத்தை விற்கும் ரஷ்யா!

Story first published: Tuesday, July 28, 2026, 21:11 [IST]

Read More

Previous Post

ஈரானுக்கு உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை! மாறியது அராக்சியின் நிலைப்பாடு

Next Post

ஃபார்முலா 1 வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு சுற்றுலா அமைச்சகத்திடம் கைரி தெரிவித்துள்ளார்

Next Post
ஃபார்முலா 1 வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு சுற்றுலா அமைச்சகத்திடம் கைரி தெரிவித்துள்ளார்

ஃபார்முலா 1 வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு சுற்றுலா அமைச்சகத்திடம் கைரி தெரிவித்துள்ளார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin