அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு எந்த திட்டமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபா அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஓமானுடன் படிப் படியாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை கண்ணிவெடிகள்
ஈரானிய அரசு தொலைக்காட்சியில், “அமெரிக்கா தான் விரும்பும் போதெல்லாம் சண்டையிடுவதற்கும், விரும்பும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கும் நாம் அதனை பழக்கப்படுத்திவிடக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் தெற்குப் பாதையை ஈரான் அங்கீகரிக்காது என மீண்டும் வலியுறுத்திய அவர், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றிலும் ஈரானின் பொறுப்பிலேயே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

