Last Updated:
நீண்ட உரைகளை விட 15 முதல் 60 விநாடிகள் கொண்ட குறுகிய காணொளிகளே தற்போதைய இளைஞர்களை எளிதில் சென்றடைகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) மூலம் ‘ஜென் Z’ (Gen Z) தலைமுறை இளைஞர்களைக் கவர்ந்து வருகிறார். அவரது பக்கத்தை மில்லியன் கணக்கில் இளைஞர்கள் பின் தொடர்கின்றனர்.
சமீபத்திய தேர்வுத்தாள் கசிவு சர்ச்சைகள் மற்றும் சிஜேபி (CJP) மாணவர் இயக்கங்கள் போன்ற அரசியல் சவால்களுக்கு மத்தியில், இளைஞர்களை நேரடியாகச் சென்றடைய செல்ஃபி வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களை தனக்கே உரிய ஸ்டைலில் பேசி வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.
பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் 10.7 கோடி பின்தொடர்பாளர்களும், இன்ஸ்டாகிராமில் 10.5 கோடி பின்தொடர்பாளர்களும் உள்ளனர். வாரத்திற்குச் சராசரியாக 3 ஷார்ட்ஸ் அல்லது ரீல்ஸ்களை அவர் பதிவிட்டு வருகிறார். நள்ளிரவில் அவர் வெளியிட்ட ஒரு ரீல் வைரலானதைத் தொடர்ந்து, ஒரே இரவில் சுமார் 10 லட்சம் புதிய பின்தொடர்பாளர்கள் அவரது கணக்கில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட உரைகளை விட 15 முதல் 60 விநாடிகள் கொண்ட குறுகிய காணொளிகளே தற்போதைய இளைஞர்களை எளிதில் சென்றடைகின்றன. எனவே, மத்திய அமைச்சர்களும் இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இயங்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களை ரீல்ஸ் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரம்பரிய ஊடகங்கள் சில நேரங்களில் அரசியல் கருத்துகளை மற்றொரு கோணத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளது. ஆனால், ரீல்ஸ் மற்றும் எக்ஸ் தளத்தின் மூலம் நேரடியாக மக்களிடம் பேசுவதன் மூலம், தனது உண்மையான கருத்துகளையும் எண்ணங்களையும் எந்தவித இடைத்தரகரும் இன்றி இளைஞர்களுக்குத் துல்லியமாகக் கொண்டு சேர்க்க முடிகிறது என்று சமூக வலைதள வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய உத்திகளை சிறப்பாக கடைபிடித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் சமூக வலைதளங்களில் அதிகம் பின் தொடரப்படும் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களையும் இளைஞர்களின் ஆதரவையும் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்கள் மூலம் ‘ஜென் Z’ தலைமுறையினருடன் வலுவான உணர்வுப்பூர்வமான இணைப்பை ஏற்படுத்த பிரதமர் மோடி இந்த ரீல்ஸ் உத்தியைக் கையாண்டு வருகிறார்.


