நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.
கோட்டை காவல் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிடியாணை பிறப்பித்தது.

இவ்வழக்கில் அர்ச்சுனா இராமநாதன் மட்டுமல்லாமல், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை வழங்கப்பட்டது.
அத்துடன் இவ்வழக்கு ஒக்டோபர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

