Last Updated:
TNPL Match | தமிழ்நாட்டில் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் எங்கு அமைப்பது என்பது இன்னும் முழு வடிவம் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் மகளிருக்கும் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் கூறியுள்ளார்.
10-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் சீனிவாசராஜ் பேட்டி அளித்தார். அப்போது, அண்மையில் நடந்த மகளிர் உலகக் கோப்பையில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் இடம்பெறவில்லையே என்ற கேள்விக்கு பதில் தந்தார்.
தொடர்ந்து பேசிய அவர் அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மகளிருக்கும் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்றார். நடப்பாண்டில் இந்த டிஎன்பிஎல் போட்டிகள், சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் எங்கு அமைப்பது என்பது இன்னும் முழு வடிவம் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.


