ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
இது குறித்த பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள எவரையும் விட எங்களிடம் அதிகமான ஆயுதங்கள் உள்ளன, மேலும் எங்களுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகவே உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டொன் கெய்ன், வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவது குறித்து வெள்ளை மாளிகைக்குத் அறிவித்துள்ளதாக அந்த அமெரிக்க நாளிதழ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ட்ரம்பின் புதிய பதிவுகள்
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ட்ரம்ப், மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில், ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றைக் கைப்பற்றுவது போலவும், ஈரானின் கார்க் தீவு எண்ணெய் ஏற்றுமதி முனையத்தின் மீது தாக்குதல் நடத்துவது போலவும் சித்தரிக்கும் பல செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு படத்தில், அமெரிக்கக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலில் ட்ரம்ப் இருப்பது போலவும், மற்றொரு படத்தில் கார்க் முனையத்தின் மீது போர் விமானங்கள் குண்டு வீசுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

