இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், வழக்கமாக முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு இளம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கே வாய்ப்பளிப்பது வழக்கமாகும். இருப்பினும், உலகக்கோப்பை வென்றவர்கள், டெஸ்ட் போட்டியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் மற்றும் ஐபிஎல் ஹீரோக்கள் திகழ்ந்த 5 முக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள், தங்கள் வாழ்நாளில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.


