• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2-ஆவது டி20-யில் 90 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி.. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2-ஆவது டி20-யில் 90 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி.. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 25, 2026 8:27 PM IST

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஜிம்பாப்வேக்கு இந்திய அணியின் பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இந்திய அணி
இந்திய அணி

ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டியை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரசா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்றே தடுமாற்றமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மற்றொரு இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 20 ரன்கள் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், இணைந்த இஷான் கிஷன் மற்றும் துணை கேப்டன் திலக் வர்மா ஜோடி ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இஷான் கிஷன் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்தார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய திலக் வர்மா 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 60 ரன்கள்* எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஜிம்பாப்வேக்கு இந்திய அணியின் பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

பிரையன் பென்னட் 32 ரன்களும், தடிவனாஷே மருமானி 24 ரன்களும் எடுத்ததே ஜிம்பாப்வே வீரர்களின் அதிகபட்ச ஸ்கோராகும். ஜிம்பாப்வே அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மாலை நடைபெறுகிறது.

Read More

Previous Post

சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றார் விஜய்.. இப்போது ஒரு சாரி கூட சொல்லவில்லை.. சாடிய கனிமொழி! | Kanimozhi: CM Vijay didn’t Even Say Sorry Now for the Lockup death says DMK MP Kanimozhi

Next Post

மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!! ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! வென்றது CJP இளம்படை..!! | Dharmendra Pradhan Resigns as Education Minister Amid NEET Paper Leak Protests, Sends Letter to PM Modi

Next Post
மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!! ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! வென்றது CJP இளம்படை..!! | Dharmendra Pradhan Resigns as Education Minister Amid NEET Paper Leak Protests, Sends Letter to PM Modi

மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!! ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! வென்றது CJP இளம்படை..!! | Dharmendra Pradhan Resigns as Education Minister Amid NEET Paper Leak Protests, Sends Letter to PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin