• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!! ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! வென்றது CJP இளம்படை..!! | Dharmendra Pradhan Resigns as Education Minister Amid NEET Paper Leak Protests, Sends Letter to PM Modi

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!! ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! வென்றது CJP இளம்படை..!! | Dharmendra Pradhan Resigns as Education Minister Amid NEET Paper Leak Protests, Sends Letter to PM Modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!! ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! வென்றது CJP இளம்படை..!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில் அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் விடாப்பிடியான போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் வகையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து சிறிய அளவில் தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் நாடு முழுவதும் பரவ தொடங்கியது. குறிப்பாக கடந்த 20ஆம் தேதி இளைஞர்கள் நடத்திய பேரணியில் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் பெரும் பதற்றம் உண்டு.

மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!!  ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! வென்றது CJP இளம்படை..!!

இதனை அடுத்து ஆயிரக்கணக்கில் மாணவர்கள் ஜந்தர் மந்தருக்கு வருகை தர தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுகம் உள்பட பல எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

போராட்டம் நடத்தும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்லள் உறுதியாக தெரிவித்தனர். இந்த சூழலில் தான் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “கனத்த மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த 10 நாட்களாக நாட்டில் நிலவி வரும் சூழல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!!  ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! வென்றது CJP இளம்படை..!!

இந்த சூழலை தேச விரோத சக்திகள் பயன்படுத்தி கொள்ள கூடாது என்பதே தனது முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி ராஜினாமா செய்தியை கேட்டவுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இருந்தாலும் இத்துடன் போராட்டம் முடியாது என்றும் அறிவித்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் பங்கேற்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே” இதுதான் ஜனநாயகம் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் .இருந்தாலும் நமக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் இருக்கின்றன” என கூறியிருக்கிறார். தர்மேந்திர பிரதான் பதவி ராஜினாமா செய்து விட்டாலும் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் இருக்கிறது அதைப்போல கடந்த 20 ஆம் தேதி அன்று போராட்டக்காரர்கள் மீது கடுமையான போக்கை கையாண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டையும் அரசு செய்தாக வேண்டும் என கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்து வருகிறார். இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இளைஞர் எழுச்சி நடந்தது இல்லை. முதல்முறையாக போராட்டங்களுக்கு பணிந்து மோடி அரசு ஒரு அமைச்சரை பதவியை ராஜினாமா செய்ய வைப்பது இதுவே முதல்முறை.

Share This Article

English summary

Dharmendra Pradhan Resigns as Education Minister Amid NEET Paper Leak Protests, Sends Letter to PM Modi

வென்றது CJP இளம்படை: ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்..!! மோடி ஆட்சியில் இதுவே முதல்முறை..!! – Union Education Minister Dharmendra Pradhan has resigned amid mounting nationwide protests over the NEET paper leak controversy. His resignation, sent to Prime Minister Narendra Modi, marks a major political development in the student-led agitation and has intensified the debate on exam integrity, accountability, and education reform.

Story first published: Saturday, July 25, 2026, 15:36 [IST]

Other articles published on Jul 25, 2026

Read More

Previous Post

2-ஆவது டி20-யில் 90 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி.. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

சமூக மேம்பாட்டுத் துறை ஆசிரியர்களுக்குச் சிறந்த ஊதியம் மற்றும் படிகள் வழங்க ஜாகித் கோரிக்கை – Malaysiakini

Next Post

சமூக மேம்பாட்டுத் துறை ஆசிரியர்களுக்குச் சிறந்த ஊதியம் மற்றும் படிகள் வழங்க ஜாகித் கோரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin