பெங்களூரு, தமிழகத்துக்கும், கர்நடகாவிற்கும் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடாக தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும்.
கர்நாடகாவில் வறட்சி
ஆனால் கர்நாடகா அரசு, காவிரி நீரை முறையாக தமிழகத்துக்கு வழங்குவதில்லை. போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. என்று காரணம் காட்டி காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிடுவதில்லை.
இந்த சூழ்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக சட்டசபையிலும் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேகதாது அணை
பிரதமர் மோடியிடம் மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் அனைத்து முயற்சிகளை தடுப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் ஆகியோருடன் ஏற்கனவே விரிவான ஆலோசனை நடத்தி இருந்தார்.
விஜய் கர்நாடகா பயணம்
இந்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் ஆகியோர் ஆகஸ்டு 3-ம் தேதி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அழைப்பை ஏற்று செல்லும் அவர் அங்கு முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதனை அமைச்சர் வினோத் இன்று உறுதி செய்துள்ளார்.



