
இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலையில் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

