Last Updated:
இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது வர்த்தக நாளாக சரிவுடன் நிறைவடைந்தன.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழலால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், வியாழன் அன்று தங்கம் நான்காவது நாளாக விலை உயர்ந்து விற்பனையானது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும், வெள்ளியைப் பொறுத்தவரையில், விலை மாற்றமின்றி கிராம் 245 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது வர்த்தக நாளாக சரிவுடன் நிறைவடைந்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 76,391 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 126 புள்ளிகள் சரிந்து 23,869 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
SBI Life, Bajaj Auto, Mahindra & Mahindra, TCS உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில், Adani Enterprises, Nestle India, Adani Ports உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் நிறைவடைந்தன.


