• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வினாத்தாள் வெளியான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வினாத்தாள் வெளியான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 23, 2026 1:12 PM IST

இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

வினாத்தாள் வெளியான வழக்குகளை விசாரிப்பதற்கு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் இளைஞர்களின் நலனும் எதிர்காலமுமே அரசுக்கு மிக முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார். நீட்-யுஜி (NEET-UG) தேர்வுத் தாள் கசிவு விவகாரம் தொடர்பாகத் டெல்லியின் ஜந்தர் மந்தரில் சிஜேபி (CJP) அமைப்பினர் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக ‘விரைவு நீதிமன்றங்கள்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தேர்வுத் தாள் கசிவை கடுமையான பாவம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், விரைவு நீதிமன்றங்கள் மூலம் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இந்தியாவின் மிகப்பெரிய சொத்தான இளைஞர்களின் எதிர்காலம் ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Nothing is more important than the welfare and future of our youth!


We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…

— Narendra Modi (@narendramodi) July 23, 2026

டெல்லியில் நடைபெற்று வரும் இப்போராட்டங்களின் போது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி நடத்த முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இச்சூழலில், மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் நாட்டின் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில் அரசின் இந்த விரைவு நீதிமன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

வினாத்தாள் வெளியான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

Read More

Previous Post

அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து : உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Next Post

தொடரும் CJP போராட்டம்.. மௌனம் கலைத்த பிரதமர் மோடி..!! நீட் தேர்வு குறித்து என்ன சொல்லி இருக்காரு? | PM Modi Breaks Silence on NEET Paper Leak: Fast-Track Courts, Strict Action, and Student Safety

Next Post
தொடரும் CJP போராட்டம்.. மௌனம் கலைத்த பிரதமர் மோடி..!! நீட் தேர்வு குறித்து என்ன சொல்லி இருக்காரு? | PM Modi Breaks Silence on NEET Paper Leak: Fast-Track Courts, Strict Action, and Student Safety

தொடரும் CJP போராட்டம்.. மௌனம் கலைத்த பிரதமர் மோடி..!! நீட் தேர்வு குறித்து என்ன சொல்லி இருக்காரு? | PM Modi Breaks Silence on NEET Paper Leak: Fast-Track Courts, Strict Action, and Student Safety

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin