சீனாவின் ஷாங்ஹாய் (Shanghai) நகரில் சியோங் (Xiong) என்பவர்டாக்சிக்காகச் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது கொசுக்கடிகளுக்கு ஆளானார். டாக்சியில் ஏறியதும் உறங்கிவிட்ட அவர், கழுத்து அரித்ததால்அறியாமல் சொறிந்துள்ளார்.

அப்போது சட்டை மற்றும் வாகனம்எங்கும் ரத்தம் கசிந்து, சுமார்40 நிமிடங்களுக்கு நின்றுவிடாமல் தொடர்ந்தது.உடனடியாக ஓட்டுநர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
கழுத்தில் உள்ள இரத்தக் குழாயின்மீது கொசு கடித்திருந்ததாலும், அதனை அவர்ஆக்ரோரமாகச் சொறிந்ததாலும் நுண்குழாய்கள் (Capillaries) சிதைந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொசுக்கடி இவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் என்பதைஉணர்ந்துகொண்ட சியோங், இனி கொசுக்களிடமிருந்து தள்ளியிருக்கப்போவதாகத் தெரிவித்தார்.

