• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிருஷ்ணகிரியில் ARIVAM.. விஜயை சந்தித்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அதிகாரிகள் சொன்ன மெகா திட்டம்! | Delta Electronics to Set Up ARIVAM AI Data Centre & Renewable Energy Hub in Krishnagiri – CM Vijay’s Mega Push

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிருஷ்ணகிரியில் ARIVAM.. விஜயை சந்தித்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அதிகாரிகள் சொன்ன மெகா திட்டம்! | Delta Electronics to Set Up ARIVAM AI Data Centre & Renewable Energy Hub in Krishnagiri – CM Vijay’s Mega Push
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிருஷ்ணகிரியில் ARIVAM.. விஜயை சந்தித்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அதிகாரிகள் சொன்ன மெகா திட்டம்!

பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி ஆலையை திட்டமிட்டு தமிழ்நாட்டில் அமைத்து வருகின்றனர், இப்படி தைவான் நாட்டின் முன்னணி பவர் மற்றும் எனர்ஜி மேனேஜ்மென்ட் நிறுவனமான டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், கிருஷ்ணகிரியில் மாபெரும் உற்பத்தி ஆலையை வைத்துள்ளது.

இந்நிலையில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கடந்த வாரம் தமிழ்நாட்டு முதல்வர் விஜயை சந்தித்தனர். இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு தனது நிறுவனத்தின் விரிவாக்கத்தில் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த கையோடு முக்கியமான ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.

கிருஷ்ணகிரியில் ARIVAM.. விஜயை சந்தித்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அதிகாரிகள் சொன்ன மெகா திட்டம்!

தற்போது கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை இடத்தில் புதிதாக ARIVAM அதாவது ஏஐ டேட்டா சென்டர், புதுப்பிக்கத்தக்க மின்சார அமைப்பு, இண்டிகிரேடெட் மைக்ரோகிரிட் சொல்யூஷன்ஸ் பிரிவுக்கான மேம்பட்ட டெஸ்டிங் மற்றும் வேலிடேஷன் சென்டர் அமைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.

இந்தியாவில் தற்போது டேட்டா சென்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையில் உருவாகும் வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்ற டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இத்திட்டத்தை முன்வைத்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் பல்வேறு துறையில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து எனர்ஜி இன்பரா, எனர்ஜி ஸ்டோரேஜ், டேட்டா சென்டர், ஆட்டோமேஷன், உற்பத்தி பணியாற்றவும் திட்டம் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதற்கு முதல்வர் விஜய் தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தாக டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த புது விரிவாக்கம் மூலம் கூடுதலாக பல வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்த புதிய ARIVAM சென்டரில் டிசைன், இன்ஜினியரிங், உற்பத்தி, லைப்சைக்கிள் மேனேஜ்மென்ட் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

கிருஷ்ணகிரி தற்போது பல துறை துறைகளின் உற்பத்தி களஞ்சியமாக மாறி வருகிறது, இதற்கு ஏற்றார் போல் இப்பகுதியில் அரசு சார்பில் சிப்காட் தொழிற்துறை பூங்காவும், தனியார் துறை பல்வேறு தொழிற்துறை பூங்காவும் அமைத்து வருகிறது. இதன் மூலம் ஓசூரின் நீட்சியாக மொத்த சேலம் – பெங்களூர் நெடுஞ்சாலை முழுவதும் தற்போது உற்பத்தி சார்ந்த பகுதியாக மாறி வருகிறது.

இதற்கு ஏற்றார் போல் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தற்போதை சேலம் – பெங்களூர் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்வதை தாண்டி, இராயகோட்டை வழியாக புதிய சாலை வசதி ஓசூர்-க்கு இணைக்கிறது. இதன் மூலம் பயணிகள் வாகனங்களும், சரக்கு வாகனங்களும் தடையின்றி வேகமாக பயணிக்க முடியும்.

Share This Article

English summary

Delta Electronics to Set Up ARIVAM AI Data Centre & Renewable Energy Hub in Krishnagiri – CM Vijay’s Mega Push

Delta Electronics to Set Up ARIVAM AI Data Centre & Renewable Energy Hub in Krishnagiri – CM Vijay’s Mega Push கிருஷ்ணகிரியில் ARIVAM.. விஜயை சந்தித்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அதிகாரிகள் சொன்ன மெகா திட்டம்!

Story first published: Sunday, July 19, 2026, 14:40 [IST]

Other articles published on Jul 19, 2026

Read More

Previous Post

FIFA 2026 | உலக கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா..? ஒரு கன்டிஷன்!  | விளையாட்டு போட்டோகேலரி

Next Post

பெட்டாலிங் ஜெயாவின் திடீர் வெள்ளம்: வெறும் அனுதாபம் தேவையில்லை; தெளிவான காலக்கெடுவுடன் விளக்கம் தேவை – எம்பி லீ சியான் சுங் அதிரடி! | Makkal Osai

Next Post
பெட்டாலிங் ஜெயாவின் திடீர் வெள்ளம்: வெறும் அனுதாபம் தேவையில்லை; தெளிவான காலக்கெடுவுடன் விளக்கம் தேவை – எம்பி லீ சியான் சுங் அதிரடி! | Makkal Osai

பெட்டாலிங் ஜெயாவின் திடீர் வெள்ளம்: வெறும் அனுதாபம் தேவையில்லை; தெளிவான காலக்கெடுவுடன் விளக்கம் தேவை - எம்பி லீ சியான் சுங் அதிரடி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin