Last Updated:
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் சோங்கிங் நகரில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில், குடியிருப்பு கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன.
அந்நாட்டின் சோங்கிங் நகரின் உஜியாங் ஆற்றங்கரையோரம் இருந்த மலையின் ஒரு பகுதி, திடீரென சரிந்து அடிவாரத்தில் இருந்த வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது விழுந்தது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தின் போது, அவ்வழியே சென்ற கார்களும், இருசக்கர வாகனங்களும் நூலிழையில் உயிர்தப்பின.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணிகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீனக் கருவிகள் உதவியுடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


