Last Updated:
’விக்ரம் 1’ ராக்கெட் வாயிலாக, கிரஹா ஸ்பேஸ் (Grahaa Space), காஸ்மோ சர்வ் (Cosmoserve), டிகியூப்ட் (DCubed) மற்றும் ஸ்கைரூட் (Skyroot)-இன் (SCOPE) ஆகிய தொழில்நுட்ப கருவிகள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் 1’ இன்று வெற்றிகரகமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ‘விக்ரம் 1’ ஏவப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ’விக்ரம் 1’ என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தன்னுடைய ஆர்பிட்டல் ராக்கெட்டை முழுவதுமாக இலகுரக கார்பனால் உருவாக்கியுள்ளது.
மேலும், மூன்று திட எரிபொருள் நிலைகள் மற்றும் ஒரு திரவ சுற்றுப்பாதை சரிசெய்தல் தொகுதி ஆகியவற்றால் இயங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைத்துள்ளது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
’விக்ரம் 1’ ராக்கெட் வாயிலாக, கிரஹா ஸ்பேஸ் (Grahaa Space), காஸ்மோ சர்வ் (Cosmoserve), டிகியூப்ட் (DCubed) மற்றும் ஸ்கைரூட் (Skyroot)-இன் (SCOPE) ஆகிய தொழில்நுட்ப கருவிகள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.30 மணியளவில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுன்டவுன் நிறுத்தப்பட்டது ராக்கெட் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இறுதிக்கட்ட பரிசோதனை வெற்றிக்கரமாக நிறைவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நண்பகல் 12.05 மணிக்கு ’விக்ரம் 1’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் வெற்றிக்கரகமா ஏவப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகள் கைத்தட்டி உற்சாகமடைந்தனர்.
Jul 18, 2026 12:13 PM IST


