• Login
Saturday, July 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சர்வதேச தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் ஊடுருவல் அதிகரிப்பு: இலங்கை சுங்கத் துறை எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சர்வதேச தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் ஊடுருவல் அதிகரிப்பு: இலங்கை சுங்கத் துறை எச்சரிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
சர்வதேச தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் ஊடுருவல் அதிகரிப்பு: இலங்கை சுங்கத் துறை எச்சரிக்கை!

அதிகாரிகளின் சோதனைகளில் இருந்து தப்புவதற்காக, சிறிய அளவிலான பொதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கைக்கு சர்வதேச தபால் பொதிகள் ஊடாக போதைப்பொருட்கள் கடத்தப்படும் ஓர் ஆபத்தான போக்கு அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத் துறை எச்சரித்துள்ளது. 

அதிகாரிகளின் சோதனைகளில் இருந்து தப்புவதற்காக, சிறிய அளவிலான பொதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுங்கத் துறை ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 04 போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைகளும், தபால் பொதிகள் தொடர்பான 09 சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, “குஷ்” (Kush) ரக போதைப்பொருளைத் தபால் மூலம் நாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான பொதிகள் தாய்லாந்திலிருந்து அனுப்பப்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தினமும் இலங்கைக்கு வரும் சர்வதேச தபால்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு பொதியையும் தனித்தனியாக மனித உழைப்பைக் கொண்டு சோதனை செய்வது சாத்தியமற்றது என புஞ்சிஹேவா விளக்கியுள்ளார். இதன் காரணமாக, சந்தேகத்துக்கிடமான பொதிகளைக் கண்டறிய சுங்கத் துறையினர் நவீன ஸ்கேனர் (Scanner) தொழில்நுட்பத்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.

தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு பொதியிலும் உள்ள போதைப்பொருளின் அளவு சிறியதாகத் தெரிந்தாலும், சமூகத்தில் அதன் தாக்கம் மிகப்பெரியது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். 

இந்தப் பொதிகள் நேரடியாகப் பயனாளருக்கு அனுப்பப்படுவதால் ஆபத்து அதிகம் என்றும், விற்பனைக்கு முன்னர் இவற்றின் அளவை அதிகரிப்பதற்காக கடத்தல்காரர்கள் ஏனைய பொருட்களுடன் போதைப்பொருளைக் கலந்து விநியோகிப்பதாகவும் சுங்கத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.


Princiya Dixci

WRITTEN BY

Princiya Dixci

2022ஆம் ஆண்டில் இருந்து நியூஸ்21 டிஜிட்டல் ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இணைந்து செய்திகளை அளித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றுவதுடன், புலனாய்வு அறிக்கை…


→

Read More

Previous Post

FIFA 2026 | இறுதி போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? | விளையாட்டு போட்டோகேலரி

Next Post

ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம்: பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் | Makkal Osai

Next Post
ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம்: பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் | Makkal Osai

ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம்: பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin