யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (16.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.

14.5 கிலோ கஞ்சா மீட்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
ஆழியவழைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதை தொடர்ந்து
மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா
பொதிகளை கைப்பற்றி மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

