வெள்ளி வாங்க சரியான நேரம் இதுதானா..? GSR சிக்னல் வந்தது.. மீண்டும் பொற்காலம் பிறக்குது!
தங்கம், வெள்ளி முதலீட்டாளர்கள் பல மாதங்களாக இந்த ஒரு விஷயத்திற்காக தான் காத்திருந்தார்கள் என்றால் மிகையில்லை. இந்த வருட துவங்கத்தில் உலகளவில் வெள்ளிக்கு உருவான அதிகப்படியான டிமாண்டின் காரணமாக இதன் விலை தாறுமாறாக உயர்ந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு கிலோ வெள்ளி விலை 4.3 லட்சம் ரூபாய் வரையில் சென்றது, 2021 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தை பார்த்தால் சராசரியாக ஒரு கிலோ வெள்ளி 80000 முதல் 950000 வரையில் தான் வர்த்தகமானது. ஆனால் 2025ல் ஆரம்பக்கட்டத்தில் 1 லட்சம் ரூபாய் என்ற முக்கிய நிலையை அடைந்தது.

இதன் பின்பு ஜனவரி 2026 வரையில் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு பொற்காலமாக மாறியது என்றால் மிகையில்லை. இதனால் பலர் தங்கத்தை விடுத்து வெள்ளியில் முதலீடு செய்ய துவங்கினர். இந்த சூழ்நிலையில் தான் GSR சிக்னல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
பொதுவாக உலோக சந்தையில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வோர் கணக்கிடும் முக்கியமான இன்டிகேட்டர் என்றால் அது கோல்டு சில்வர் ரேஷியோ தான். GSR என்பது ஒரு அவுன்ஸ் தங்கம் விலைக்கு எத்தனை அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் என்பதை தான் குறிக்கிறது.
அதாவது தற்போது 4033.21 டாலருக்கு விற்கப்படும் தங்கத்திற்கு இணையாக 72 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் (56 டாலர்) இதை கோல்டு சில்வர் ரேஷியோ அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் 72:1.
இந்த ரேஷியோ 80 மற்றும் அதற்கு அதிகமாக இருந்தால் தங்கம் காஸ்ட்லியாக உள்ளது, வெள்ளி குறைவாக மதிப்பிடப்படுகிறது என்று பொருள். இக்காலக்கட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனன செய்துவிட்டு வெள்ளியை வாங்குவார்கள். இந்த மாற்றம் மூலம் வெள்ளி விலை உயரும்.
இதுவே இந்த இந்த ரேஷியோ 50 மற்றும் அதற்கு கீழ் இருந்தால், வெள்ளி விலை அதிகமாகவும், தங்கம் விலை சீப் ஆகவும் இருப்பதாக பொருள். வெள்ளி விலை இந்தியாவில் ஜனவரி மாதம் 4,25,000 ரூபாயாக இருக்கும் போது GSR அளவு 50:1 ஆக இருந்தது.
இதையே இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 24 கேரட் தங்கம் விலை 14346, 1 கிராம் வெள்ளி விலை 240 ரூபாயாக உள்ளது. இதற்கான GSR அளவு 59:1 ஆகும். பொதுவாக தங்கம், வெள்ளி உலோகம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காரணத்தால் டாலரில் கணக்கிடும் போது தான் அதன் உண்மையான (சர்வதேச சந்தை போக்கு) போக்கு தெரியும்.
தற்போதைய நிலையில் Gold-Silver ratio 72:1 ஆக இருக்கும் காரணத்தால் வெள்ளியில் முதலீட்டு செய்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என பலர் நினைக்கலாம், உண்மையில் 69 என்பது நீண்ட முதலீட்டு சந்தையில் இது சராசரி அளவீடு என Tata Mutual Fund தெரிவித்துள்ளது.
இதனால் என்டரி கொடுக்க இது சரியான நேரமா என்றால் இல்லை என்பது தான் உண்மை. உலக நாடுகளில் போர், முதலீட்டாளர்களின் நிலையற்ற மன நிலை, மத்திய வங்கிகளின் வட்டி நிர்ணயம் செய்வதில் உறுதியற்ற தன்மை, அதிகரிக்கும் பணவீக்கம், தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் என பல காரணங்கள் மத்தியில் தங்கமும், வெள்ளியும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தற்போதைய நிலையில் வெள்ளி, தங்கம் இரண்டுமே குறைவாகவும் இல்லை, அதிக விலை நிலையிலும் இல்லை என்பது தான் உண்மை. இது 80:1 ஆக உயர்ந்தால் வெள்ளியில் முதலீடு செய்யும் வாய்ப்பை உருவாக்கும்.

