• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆடி வெள்ளி பூக்களுக்கு செம்ம டிமாண்ட்… குண்டு மல்லி ரூ.600, ஜாதி மல்லி ரூ.850 விற்பனை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஆடி வெள்ளி பூக்களுக்கு செம்ம டிமாண்ட்… குண்டு மல்லி ரூ.600, ஜாதி மல்லி ரூ.850 விற்பனை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 16, 2026 1:48 PM IST

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

+

News18

News18

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தி பரவசம் நிலவி வருகிறது. இதையொட்டி, விழுப்புரம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் தினசரி மலர் சந்தையில் இன்று பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல், அம்மன் வழிபாட்டிற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள், சிறப்பு அபிஷேகங்கள், கூழ்வார்த்தல் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் களைகட்டுவது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், துர்க்கையம்மன், அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி, விழுப்புரம் நகரின் பல்வேறு ஆலயங்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இதனால் வீடுகள் மற்றும் கோவில்களில் வழிபாடு நடத்துவதற்காக பொதுமக்களும், கோவில் நிர்வாகிகளும் இன்று அதிகாலை முதலே மலர் சந்தையில் திரண்டனர்.

தேவை அதிகரித்ததன் காரணமாக பூக்களின் விலையும் ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்பனையான குண்டு மல்லிகை இன்று ரூ.600-க்கும், ரூ.400-க்கு விற்பனையான அரும்பு ரூ.500-க்கும், ரூ.240-க்கு விற்பனையான அரளிப்பூ ரூ.300-க்கும் விற்பனையாகிறது. மேலும், ரூ.600-க்கு விற்பனையான ஜாதி மல்லி இன்று ரூ.850-க்கும், சாமந்திப்பூ கிலோ ரூ.500-க்கும், பன்னீர் ரோஜா ரூ.250-க்கும், ரூ.140-க்கு விற்பனையான சம்மங்கி ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூ மாலைகளின் விலையும் ரூ.300 முதல் ரூ.500 வரை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மலர் வியாபாரிகள் கூறுகையில், “ஆடி மாதத்தில் பூக்களின் தேவை எப்போதும் அதிகமாகவே இருக்கும். தற்போது வரத்து குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சாமந்தி, குண்டு மல்லி மற்றும் முல்லைப்பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விலை உயர்ந்திருந்தாலும் பக்தர்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்,” என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

இந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டார்.. மெஸ்ஸி, எமாலையே ஓரங்கட்டிய 3 வயது சிறுவன்! யாருங்க இது? | FIFA World Cup 2026: Who is the Keyne Yamal, the 3-Year-Old sensation of this season?

Next Post

நெட்வொர்க் பள்ளியில் இஸ்ரேலியர்கள் இருந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. – Malaysiakini

Next Post

நெட்வொர்க் பள்ளியில் இஸ்ரேலியர்கள் இருந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin